
செமிகண்டக்டர் நிறுவனங்களின் சிறப்பான அரையாண்டு நிதி முடிவுகளால், சீனாவின் ஷாங்காய் காம்போசிட் குறியீடு 0.8 சதவீதம் உயர்ந்து 3,960.19 புள்ளிகளை எட்டியது.
சிஎக்ஸ்எம்டி நிறுவனத்தின் பங்குகள் 9 சதவீதமும், ஷென்சென் சீனா மைக்ரோ செமிகண்டக்டர் நிறுவனத்தின் பங்குகள் 15 சதவீதமும் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன.
ஹாங்காங் பங்குச்சந்தையில் ஹேங் செங் குறியீடு 1.6 சதவீதம் உயர்ந்து 25,521.99 புள்ளிகளாகப் பதிவான நிலையில், நுகர்வோர் மற்றும் மதுபானத் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.