
சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளதாக எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 9-ம் தேதி இரவு சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.