
ரஷ்யாவின் உபா நகரில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில், அங்கு மருத்துவக் கல்வி பயின்று வரும் இந்திய மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பஷ்கொர்டோஸ்தன் மாகாணத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் அந்த மாணவர், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 4 ஆண்டுகளாக நீடிக்கும் ரஷ்யா-உக்ரைன் போரில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.