
சீனாவின் மோகி நகரில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது.
ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணியும் சாம்பியன் பட்டம் வென்றது.