
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 95-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் கலாம் உணவகத்தின் வெற்றிச் சந்திப்பு ஆகிய முப்பெரும் விழா சிங்கப்பூரில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தேவையுள்ள மாணவர்களுக்கு புத்தகப் பற்றுசீட்டுகளும் சிறப்புப் பரிசுப் பைகளும் வழங்கப்பட்டன.
நறுமணமிக்கச் சீரகச் சம்பா அரிசியில் 1.9 மீட்டர் நீளமும் 0.45 மீட்டர் அகலமும் கொண்ட பிரம்மாண்ட தட்டில் தயாரிக்கப்பட்ட 'கலாம் பிரியாணி' சிங்கப்பூரின் மிகப்பெரிய மட்டன் பிரியாணி தட்டு என்ற பிரிவில் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது.