
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது லஞ்சக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிதியமைச்சர் மரிய வில்சன் மீது, லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் பேசிய மரிய வில்சன், பள்ளிகளுக்கு அனுமதி வழங்க திமுக ஆட்சியில் லஞ்சம் பெறப்பட்டதற்குத் தானே சாட்சி என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் மற்றும் உண்மைகளைக் கண்டறிய விசாரணை நடத்த வேண்டும் என வழக்கறிஞர் கே.பெரியார் புகாரில் வலியுறுத்தியுள்ளார்.