
தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, சென்னையில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரூ.75,000 வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே முழு தள்ளுபடி மற்றும் அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி என்ற அரசின் அறிவிப்பு ஏமாற்றமளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க முதல்வரைச் சந்திக்க அனுமதி கோரியுள்ளதாகவும், பேச்சுவார்த்தைக்குப் பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.