
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில், கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் ஒற்றை கையில் அபார கேட்ச் பிடித்தார்.
மழையால் 16 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில், கயானா அணி 185 ரன்கள் குவித்த நிலையில், டிரினிடாட் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கயானா அணியின் ஷிம்ரான் ஹெட்மயர் 40 பந்துகளில் சதம் விளாசி அசத்திய நிலையில், முகமது நபி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.