
இந்தோனேசியாவின் அனக் கிரகடோவா எரிமலை வெடித்ததால் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளில் சாம்பல் மேகங்கள் 50,000 அடி உயரம் வரை பரவியுள்ளன.
ஜகார்த்தா விமான நிலையத்தில் சர்வதேச விமானங்கள் உட்பட 209 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
2018-ம் ஆண்டு இதே எரிமலை வெடிப்பால் சுனாமி ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்த நிலையில், தற்போது சுனாமி அபாயம் இல்லை என பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.