
டாடா மோட்டார்ஸின் 2026 மாடல் பன்ச் இவி கார், பாரத் என்கேப் கிராஷ் டெஸ்டில் மீண்டும் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ளது.
பெரியவர் பாதுகாப்பில் 32-க்கு 31.09 புள்ளிகளையும், குழந்தை பாதுகாப்பில் 49-க்கு 45 புள்ளிகளையும் இந்த கார் பெற்றுள்ளது.
2024-ம் ஆண்டிலும் இதே கார் 5 ஸ்டார் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது, இருப்பினும் பெரியவர் பாதுகாப்பு புள்ளிகள் முந்தைய ஆண்டை விட சற்று குறைந்துள்ளது.