கோவை நவஇந்தியா அருகே உள்ள தனியார் கட்டுமானப் பகுதியில் தற்காலிக குடியிருப்புகளில் ஏற்பட்ட சிலிண்டர் வெடிவிபத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்த இடத்தில், அடுத்தடுத்து 20 சிலிண்டர்கள் வெடித்ததால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
வடக்கு, தெற்கு, கணபதி மற்றும் பீளமேடு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.