உடலில் திடீரென்று சிவப்பு வண்ணத்திலான திட்டுகள் தோன்றி அரிப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்தும் பாதிப்பு மருத்துவ மொழியில் 'அர்ட்டிகேரியா' என அழைக்கப்படுகிறது.
ஒவ்வாமை அல்லது ஒவ்வாமைக்கான எதிர்வினைகள் காரணமாக குருதியில் ஹிஸ்டமின் என்ற வேதிப்பொருள் கலப்பதால் தோலில் இந்த நிறமாற்றம் மற்றும் அரிப்பு ஏற்படுகிறது.
பெரும்பாலானவர்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் இது தானாக மறைந்துவிடும் என்றாலும், இரண்டு வாரத்திற்கும் மேலாக நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.