
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனமான டிகந்தரா, உளவு செயற்கைக்கோள்களைக் கண்காணிக்கும் MOSAIC எனும் புதிய விண்வெளி கண்காணிப்பு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் மூலம் இயங்கும் இந்த அமைப்பு, விண்வெளியில் உள்ள நூற்றுக்கணக்கான பொருட்களை ஒரே நேரத்தில் அடையாளம் கண்டு கண்காணிக்கும் திறன் கொண்டது.
இந்த தொழில்நுட்பம் லடாக்கில் நிறுவப்பட்டுள்ளதுடன், நமீபியா, சிலி மற்றும் நியூ மெக்சிகோ போன்ற இடங்களிலும் அமைக்கப்பட்டு உலகளாவிய கண்காணிப்பு திறனை இந்தியாவுக்கு வழங்குகிறது.