
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரையிலான பக்கிங்காம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ' எனப்படும் புதிய நீர்வழிப் போக்குவரத்துத் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக விரிவான திட்ட அறிக்கை மற்றும் சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிப்பதற்கான டெண்டரை மெட்ரோ நிறுவனம் தற்போது கோரியுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த நீர்வழிப் போக்குவரத்துத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.