
பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் பகுதி தள்ளுபடி பெற்ற விவசாயிகள், நிலுவைத் தொகையை செலுத்தாத நிலையில், அவர்களிடம் கடன் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்த கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
புதிய பயிர்க்கடன் வழங்க, நிலுவை இல்லாத அனைத்து விவசாயிகளுக்கும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கடன் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகள் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு, முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மண்டல இணை பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.