Health & Environment
இலங்கையில் டெங்கு பாதிப்பு 82,838 ஆக உயர்வு

இலங்கையில் டெங்கு பாதிப்பு 82,838 ஆக உயர்வு

Newsfirst2h
THE BRIEF
1

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,838 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

2

டெங்கு பாதிப்பால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாகப் பதிவாகியுள்ளது.

3

அபாயம் மிக்க 172 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதில், அதிக பாதிப்புள்ள 63 பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.