
கிரீஸ் தலைநகர் ஏதேன்ஸில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின்போது, விமானப்படைக்குச் சொந்தமான எப்-4 பாத்தான் ரக போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் விமானம் தீப்பற்றி எரிந்த நிலையில், அதில் இருந்த இரண்டு விமானிகளும் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினர்.
விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.