
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி மற்றும் புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.