
முரசு புயலில் சிக்கி ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே கரை ஒதுங்கிய சென்னை காசிமேடு மீனவர்கள் 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
காசிமேட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் சென்ற படகு புயலில் சிக்கியதில், படகு இன்ஜின் பழுதாகி அனைவரும் மாயமான நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு தலா ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளதோடு, உடல்களை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது.