
கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில், கோகோ காப் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் கெய்லா டே-வை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் எலீனா ரிபாகினா 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் டாரியா கசட்கினாவை வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
நாளை நடைபெற உள்ள 3-வது சுற்றில் கோகோ காப், கிரீசின் மரியா சக்காரியை எதிர்கொள்கிறார்.