
லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 159 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், டுவைன் பிராவோ 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ஓவர்களில் 165 ரன்கள் அடித்து வெற்றி பெற்றதுடன், டுவைன் பிராவோ ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.