
தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை கடத்திச் சென்ற கார் நிற்காமல் சென்றபோது அதன் மீது ஏறி 40 கிலோமீட்டர் தூரம் படுத்துக் கொண்டே துரத்திய ஏட்டு வேல்முருகனை முதல்வர் விஜய் சென்னைக்கு வரவழைத்து பாராட்டி பரிசு வழங்கினார்.
உங்களை போன்ற துணிச்சலான காவலர்களால் தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்கிறது என முதல்வர் விஜய் பாராட்டினார்.
வேல்முருகன் துரத்திய கார் அவிநாசி அருகே தடுத்து நிறுத்தப்பட்டு, அதில் இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டதோடு 233 கிலோ குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது.