
அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான புகார்களைப் பெண்கள் ஒருவருக்கொருவர் ரகசியமாகப் பகிர்ந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
100-க்கும் மேற்பட்ட பெயர்கள் அடங்கிய தனிப்பட்ட ஆவணமான 'Whisper Network' மூலம் பெண்கள் எச்சரிக்கைகளைப் பரிமாறிக்கொள்கின்றனர்.
பணி வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகப் பலர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கத் தயங்குவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.