
அமெரிக்காவில் எச்1பி விசா வைத்திருப்பவர்களின் கணவர் அல்லது மனைவி மற்றும் அடைக்கலம் கோருவோருக்கு வழங்கப்பட்டு வந்த தற்காலிக பணி அனுமதி நீட்டிக்கும் நடைமுறையை அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு ரத்து செய்துள்ளது.
முன்னதாக, பணி அனுமதிக்கு விண்ணப்பித்து 540 நாட்கள் கடந்தும் அனுமதி வழங்காவிட்டால் தானாகவே அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்படும் முறை நடைமுறையில் இருந்தது.
புதிய விதியின்படி, இனிமேல் பணி அனுமதிக்கான ஆவணங்கள் அதிகாரப்பூர்வமாகக் கையில் கிடைக்கும் வரை சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்ய முடியாது.