
கரூர் மாவட்டம் குளித்தலையில் 4 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த மாணிக்கம் என்ற வாலிபரை, சிறுமியின் பாட்டி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிக்கு ஏற்பட்ட வயிற்று வலியால் கொடூரம் தெரியவந்த நிலையில், ஆத்திரமடைந்த பாட்டி சுங்கச்சாவடி பகுதியில் அந்த வாலிபரைத் தேடிச் சென்று தாக்கியுள்ளார்.
பலத்த காயமடைந்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து குளித்தலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.