
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்குச் சொந்தமான சொத்து தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போனி கபூர் குடும்பத்தினரும் மனுதாரர்களும் சமரசப் பேச்சு மூலம் தீர்வு காண ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை மத்தியஸ்தராக உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
சமரசத் தீர்வு எட்டப்படாவிட்டால் டிசம்பர் 18-க்குள் பதிலளிக்குமாறு போனி கபூர் குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.