
1960-ல் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன், தனது திரைப்பயணத்தில் 67 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்திறன் கொண்ட கமல்ஹாசனின் சாதனைகளைக் கொண்டாடும் வகையில் '67 Years of Kamalism' என்ற சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ, அவரது நீண்டகால கலைப்பயணத்தையும் பல்வேறு பரிமாணங்களையும் நினைவுகூருகிறது.