
ரஷியாவின் அமூர் மாகாணத்தில் விமானப்படைக்கு சொந்தமான டியூ-95 என்ற அணு ஆயுத வல்லமை பெற்ற குண்டு வீச்சு விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியதில் அதில் பயணித்த 6 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒரே ஒரு வீரர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.