
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் நடத்தவிருந்த இருசக்கர வாகனப் பிரச்சாரப் பேரணிக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பேரணிக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து கலி பூங்குன்றன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமிநாதன், போராட்டத்திற்கான அடிப்படை உரிமையை வலியுறுத்தி காவல்துறைக்குக் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
காவல்துறை தரப்பில் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டதை உறுதி செய்ததையடுத்து, நீதிபதி இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.