
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா 2026-ஐ நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் இதுவரை 22,498 என்ஜிஓக்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய மசோதாவின்படி உரிமம் ரத்தான அமைப்புகளின் சொத்துக்களை அரசு கையகப்படுத்தும்.
மசோதாவை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சி, ஆகஸ்ட் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தில் ஆஜராகுமாறு தனது எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.