
தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், ஆகஸ்ட் 17 முதல் 19 வரை செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 17-ல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், 18-ல் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களிலும், 19-ல் நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை சின்னக்கல்லாரில் 9 செமீ மழையும், நாமக்கல் சேந்தமங்கலம், விழுப்புரம் மரக்காணம், தஞ்சை மருத்துவக்குடியில் தலா 8 செமீ மழையும் பதிவாகியுள்ளது.