
தமிழகத்தில் மழை பெய்து வருவதாலும், காற்றாலை மின் உற்பத்தி 4,000 முதல் 5,000 மெகாவாட்டாக அதிகரித்ததாலும் மாநிலத்தின் மின் தேவை நெருக்கடி குறைந்துள்ளது.
பகலில் உபரியாக உள்ள 1,000 முதல் 3,000 மெகாவாட் மின்சாரத்தை மின் வாரியம் சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
இதற்கு முன் மின் தேவை அதிகரித்த சூழலில், சந்தையில் மின்சாரம் வாங்கியும் பற்றாக்குறை நிலவியதால் சென்னை நீங்கலாக மற்ற இடங்களில் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டது.