
தைவானில் நடைபெற்ற தைபே ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் தன்வி சர்மா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இறுதிப்போட்டியில் வியட்நாமின் நியூயென் து லின்-ஐ எதிர்கொண்ட தன்வி சர்மா, 21-16 மற்றும் 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அசத்தினார்.
இந்தத் தொடரின் அரையிறுதியில் இந்தியாவின் மற்றொரு வீராங்கனையான உன்னதி ஹூடா தோல்வியடைந்த நிலையில், தன்வி சர்மா இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.