
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் சிறுவனைப் பயன்படுத்தியதாக திமுகவின் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியார் சிலை அருகே நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் இந்த சம்பவம் நடந்ததாகத் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறியது மற்றும் முதல்வரை அவமதிக்கும் வகையில் பேசியதாகப் புகார் எழுந்ததையடுத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.