
காஸ்பியன் கடலில் ஈரானிய சரக்கு கப்பல் மீது உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போரில் ரஷ்யாவிற்கு ஈரான் உதவுவதாகவும், அதற்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் தரப்பு உக்ரைனுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.