/nakkheeran/media/media_files/2026/09/29/anandh-minister-cm-vijay-2026-09-29-23-06-41.jpg)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சித்ராவுத்தன்பாளையம் கிராமத்தில் உள்ள மாருதி நகரில் நாளை மாலை 3:00 மணிக்கு நடைபெறுகிறது.
பாதுகாப்புக் கருதி கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர், சிறுமியர், பள்ளி மாணவ, மாணவியர், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு விரைவு குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை என்பதால் அவர்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விரைவு குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5,000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.