
பிரபல மின்சார வாகனத் தயாரிப்பான டெஸ்லா தனது 'ஃபுல் செல்ப்-டிரைவிங்' (FSD) என்ற பெயரை ஐரோப்பிய சந்தையில் அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளது.
இனி ஐரோப்பிய நாடுகளின் இணையதளங்கள் மற்றும் விளம்பரங்களில் இப்பெயருக்குப் பதிலாக 'டெஸ்லா அசிஸ்டெட் டிரைவிங்' என்ற புதிய பெயர் பயன்படுத்தப்படவுள்ளது.
கார்கள் முழுமையாகத் தாமாகவே இயங்கும் என்ற தோற்றம் ஓட்டுநர்களைத் திசைதிருப்பக்கூடும் என்ற ஐரோப்பிய ஒழுங்குமுறை அதிகாரிகளின் தொடர் கவலைகளுக்குப் பிறகு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.