
தெற்கு ஏமனில் ஷப்வா மாகாணத்தில் உள்ள அல்-அலம் ராணுவப் பயிற்சி முகாம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஏமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசுக்கு ஆதரவான புதிய வீரர்களைச் சேர்த்துக் கொள்ளும் முகாமில் அணிவகுப்பு நடைபெற்றபோது மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகள் அடுத்தடுத்து விழுந்து வெடித்தன.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரத்த தானம் செய்யுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.