
ஆகஸ்ட் 21-ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 12.42 பில்லியன் டாலர் அதிகரித்து, 729.33 பில்லியன் டாலராக உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 9.48 பில்லியன் டாலர் அதிகரித்து 591.33 பில்லியன் டாலராகவும், தங்கம் கையிருப்பு 2.80 பில்லியன் டாலர் அதிகரித்து 114.21 பில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் 'எஃப்சிஎன்ஆர்-பி' போன்ற அந்நியச் செலாவணி வைப்புத் திரட்டல் நடவடிக்கைகளின் கீழ் நாடு இதுவரை 72 பில்லியன் டாலரை திரட்டியுள்ளது.