/nakkheeran/media/media_files/2026/10/10/1004-2026-10-10-13-02-02.jpg)
ராஜபாளையம் பகுதியில் பூ வியாபாரி வீட்டில் நடந்த நகை திருட்டு வழக்கில் பெண் முதன்மை காவலர் பாக்கியலட்சுமிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
நகைக்கடையில் நகையை விற்க முயன்றபோது சிக்கியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர், மன உளைச்சல் காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி பெண் காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.