
அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளில் நிச்சயமற்ற தன்மை மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்தியா முதலீடுகளை ஈர்ப்பதில் சவாலை சந்திப்பதாக நிதியமைச்சக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் நிகர அடிப்படையிலான அன்னிய நேரடி முதலீடு கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 7.80 சதவீதம் வளர்ச்சி கண்ட இந்திய பொருளாதாரம், அடுத்த காலாண்டிலும் 7.30 சதவீதம் வரை வளர வாய்ப்புள்ளது.