திருவாலங்காடு ஒன்றியம் அரும்பாக்கம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய்கள் இல்லாததால் குடியிருப்புகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
குப்பைகள் முறையாக அகற்றப்படாததால் கொசுக்கள் உற்பத்தியாகி, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தூய்மையை உறுதிப்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.