
சுவிட்சர்லாந்தின் புட்ஸ் பகுதியில் ரெயில் தண்டவாளங்களுக்கு இடையே சூரிய ஒளி தகடுகள் அமைத்து மின்சாரம் தயாரிக்கும் முயற்சி வெற்றிகரமாக நடந்துள்ளது.
100 மீட்டர் தூரத்திற்கு பொருத்தப்பட்ட 48 சூரிய ஒளி தகடுகள் மூலம் 18 கிலோவாட் மின் உற்பத்தி திறன் பெறப்பட்டுள்ளது.
இந்த தண்டவாளங்களைக் கடந்து சென்ற 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்களால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் 16 ஆயிரத்திற்கும் அதிகமான கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.