
தமிழகத்தில் விவசாயிகளின் வருவாயை உயர்த்தவும், நவீன தொழில்நுட்பங்களை புகுத்தவும் ரூ.2 கோடியில் உழவர் செயற்கை நுண்ணறிவு (AI) திட்டம் செயல்படுத்தப்படும்.
குறுதானிய இயக்கத்திற்கு ரூ.7.61 கோடியும், பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்திற்கு ரூ.27.21 கோடியும், மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.36 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீர் மேலாண்மைக்காக ரூ.785 கோடியில் துளி துளி தண்ணீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு, நடப்பாண்டில் 2.23 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 95 ஆயிரம் விவசாயிகள் பயனடைவார்கள்.