
நான்காண்டுகளாக நீடிக்கும் ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க குழுவினர் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அமெரிக்க குழுவில் இடம்பெற்றுள்ள ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் நேற்று மாஸ்கோவிலும், இன்று கீவ் நகரிலும் இந்த முக்கிய சந்திப்புகளை மேற்கொண்டனர்.
உக்ரைனின் தாக்குதல்களால் ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போர் சூழல் காரணமாக இந்த அமைதி பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.