
காசா போர் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, ஜெர்மனி தலைநகர் பெர்லின் மற்றும் பிரிட்டன் தலைநகர் லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நகரங்களில் பாலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்தன.
இஸ்ரேலுக்கு ஜெர்மனி அரசு அளிக்கும் ராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார ஆதரவைக் கண்டித்த போராட்டக்காரர்கள், அந்நாட்டின் மீது தடைகள் விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ரீமா ஹசன், ஸ்ட்ராஸ்பர்க்கில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த இஸ்ரேல் கொடியை அகற்றினார்.