
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவுகளை கர்நாடகா மதிக்காததால், தமிழக முதல்வர் விஜய் அறிவுறுத்தலின்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஜூலை 28 அன்று அடுத்த 15 நாட்களுக்கு பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3500 கன அடி நீர் திறக்க உத்தரவிட்ட நிலையில், ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை 158 முதல் 550 கன அடி மட்டுமே வந்துள்ளது.
கர்நாடக அணைகளில் மொத்தம் 77.537 டி.எம்.சி நீர் இருப்பு உள்ள நிலையில், தமிழகத்திற்கு விகிதாச்சாரப்படி கிடைக்க வேண்டிய 26.954 டி.எம்.சி நீரை வழங்காததால், ஆகஸ்ட் 3 அன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.