திருப்பூர் மாவட்டம் கோவில்வழி பகுதியில் முன்னறிவிப்பு ஏதுமின்றி நேற்று காலை 9:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்சார வினியோகம் தடைபட்டது.
இந்த திடீர் மின்தடையால் அப்பகுதியில் இருந்த வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் இயக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
மின் ஒயர் மாற்றும் பணிக்காக மின்சாரம் நிறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்த போதிலும், மாலை வரை மின் இணைப்பு வழங்கப்படாததால் நுகர்வோர் புகார் தெரிவித்தனர்.