
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் புதிய படமான ‘டி56’ படத்தின் பூஜை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மாரநாடு கருப்பணசாமி கோவிலில் இன்று நடைபெற்றது.
'லப்பர் பந்து' படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் இப்படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படம் வெற்றி பெற வேண்டி நடிகர் தனுஷ் 18 அடி நீளமுள்ள அரிவாளைக் காணிக்கையாகச் செலுத்தியதுடன், ரசிகர்களுக்குக் கிடா வெட்டி விருந்தும் வழங்கப்பட்டுள்ளது.