/polimer-news/media/media_files/2026/10/15/4-2026-10-15-12-28-02.jpg)
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகியதை தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த பருவமழையானது தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திர கடலோரப் பகுதிகள், ராயலசீமா மற்றும் கர்நாடகாவின் தெற்கு உள்பகுதிகளில் வளிமண்டலச் சுழற்சி காரணமாகத் தொடங்கியுள்ளது.
அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் ஓர் ஆண்டிற்கான ஒட்டுமொத்த மழையில் 50 சதவீதத்தை இந்த வடகிழக்கு பருவமழை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.